*
அண்மையாய்
பின் சேய்மையாய்
சுட்டப்பட்டவள்
நான்
உன் இலக்கணத்தில்
*
உனக்கானவையான
எழுத்துக்களால்
நிறைந்திருக்கின்றன
என் இரவுகள்
*
காலங் காலமாய்
சாகாத காதல்தான்
இருப்பினும்
நீ சொல்லாமல் போனதால்
தினம் தினம் சாகிறேன்
*
மதியம்
பெய்த மழையில்
கொஞ்சமாய் உன் நினைவில்
நனைய நினைத்து
முடியாமல்
முழுதுமாய்
-
சல்மா தினேசுவரி (Salma Dhineswary)


Super😍
ReplyDeleteநன்றி உங்களுக்கு...
DeleteSuper dear🤩
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் கண்மணி
Deleteகாலங் காலமாய்
ReplyDeleteசாகாத காதல்தான்
இருப்பினும்
நீ சொல்லாமல் போனதால்
தினம் தினம் சாகிறேன்
👌👌👌👌
நன்றியும் மகிழ்ச்சியும்
Delete