Home Top Ad

வனைந்தெடுத்த சொற்கள்...

Share:

 

Google Photo
வளராத வயதில் விட்ட

வார்த்தைகளில் வரலாறு எழுத

வக்கிரமாய் ஒரு கூட்டம் நின்று கொண்டே

 

மூட்டைக்கட்டி சவக்குழிக்குக்

கொண்டு செல்லும்

காட்டாத பாசம் போல

இவைப் பொத்திவைக்கப்படுவதில்லை

வழிவழியே கொண்டுச்செல்லப்படுகிறன

 

நல்ல வார்த்தைகளை நாம்

இறுகிபிடிப்பதில்லை

வேண்டாத சொற்களையே

சொரிந்து சொரிந்து சுகம் காண்கிறோம்

 

ஐந்திலும் வளைவதில்லை

ஐம்பதிலும் வளைவதில்லை

சொற்களை வனைந்தெடுத்து

சுடச் சுடச் சுட்டவன்

நகர்ந்துவிடுகிறான்

 நின்ற இடத்தில் நாம் மட்டும்

தேங்கியபடியே …

 

- சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)

 

2 comments:

  1. நல்ல வார்த்தைகளை நாம்

    இறுகிபிடிப்பதில்லை

    வேண்டாத சொற்களையே

    சொரிந்து சொரிந்து சுகம் காண்கிறோம்

    100% உண்மை...

    ReplyDelete