![]() |
| Google Photo |
வார்த்தைகளில் வரலாறு எழுத
வக்கிரமாய் ஒரு கூட்டம் நின்று கொண்டே
மூட்டைக்கட்டி சவக்குழிக்குக்
கொண்டு செல்லும்
காட்டாத பாசம் போல
இவைப் பொத்திவைக்கப்படுவதில்லை
வழிவழியே கொண்டுச்செல்லப்படுகிறன
நல்ல வார்த்தைகளை நாம்
இறுகிபிடிப்பதில்லை
வேண்டாத சொற்களையே
சொரிந்து சொரிந்து சுகம் காண்கிறோம்
ஐந்திலும் வளைவதில்லை
ஐம்பதிலும் வளைவதில்லை
சொற்களை வனைந்தெடுத்து
சுடச் சுடச் சுட்டவன்
நகர்ந்துவிடுகிறான்
நின்ற இடத்தில் நாம்
மட்டும்
தேங்கியபடியே …
- சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)


நல்ல வார்த்தைகளை நாம்
ReplyDeleteஇறுகிபிடிப்பதில்லை
வேண்டாத சொற்களையே
சொரிந்து சொரிந்து சுகம் காண்கிறோம்
100% உண்மை...
உண்மைதான் தோழி, மிக்க நன்றி!
Delete