அறிவினுள் எல்லாந் தலையென்ப உரைத்தாளும்
வருத்தி வருத்தி வாழ்விழக்கச் செய்தப்பின்
ஞானியாய் ஞான உபதேசம் செய்யும்
செறுக்கில்லா முட்டாளாய் இருப்பதில்தான்
சுவாரசியங்கள் மிகுந்திருக்கிறது…
பாவங்கள் தூர்வார்க்கப்பட்டு புதிது புதிதாய்
சமரசம் செய்யும் போது
அரிச்சந்திரனாகவும்
புத்தப்பிட்சுவாகவும் யார் யாரோ
வந்து போவர் மனிதம் எனும் முகமூடி அணிந்து
வள்ளலாரின் பரம்பரைத் தொடங்கி
மகாத்மா காந்திவரை சத்தியசோதனையாய்
மிக சகஜமாய் நமக்குச் சவக்குழி தோண்டி நிற்பர்
வாய்ப்பிளந்து வார்த்தைகள் தொலைக்கும் அக்கணத்திலேயே
சமாதியாகும் சாத்தியங்களும் உண்டு
இலக்கியம் சார்ந்த கற்றலும்
இயற்கை சார்ந்த வாழ்வும்
இடம் பொருள் ஏவலுக்கு எட்டாத தூரத்தில்
உலகத்தோடு ஒட்ட ஒழுக அவசியம் எனில்
செறுக்கில்லா முட்டாளாய் இருப்பதில்தான்
சௌகரியங்கள் மிகுந்திருக்கிறது!
-சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)

அருமை சகோ! 👍👏
ReplyDeleteமிக்க நன்றி சகோ, உங்களின் கருத்து எப்போதும் உத்வேகத்தை அளிக்கிறது!
DeleteArumai Snr..👌👌👌
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
DeleteArumai Snr..👌👌👌
ReplyDeleteArumai Snr..👌👌👌
ReplyDeleteArumai Snr..👌👌👌
ReplyDeleteசிறப்பு,தோழி🌹
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
Deleteஅர்த்தமுள்ள கருத்துகள் சகோதரி....
Deleteமனிதன் மனிதனாக வாழ வேண்டும்..
நாம் நாமாக வாழ்வோம்...
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!
Deleteஅர்தமுள்ள கவிதை. சிறப்பாக உள்ளது. தொடரட்டும் தங்களின் முயற்சி.
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும், நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்!
Deleteசிறப்பான கவிதை டினேஸ் ஆசிரியை..
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும்!
Deleteநாம் நாமாக வாழ்வோம்...
ReplyDeleteமிக்க நன்றி எனி ஆசிரியை, நிச்சயமாக !
Deleteஅருமை தோழி
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும்!
DeleteSuper dear
ReplyDeleteஆழமான வாழ்வியல் தத்துவம்!
ReplyDeleteதலைப்பு 👌 டினேஸ்வரி.
ReplyDeleteசிறப்பான கவிதை. வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteசிறப்பு. வாழ்த்துகள் தோழி
ReplyDelete