Home Top Ad

வீழ்வதும் வாழ்வதும்…

Share:

 வீசாத வரை சொற்கள் என்னுடையது

பேசாத வரை பொறுமை என்னுடையது

 வில்லிலிருந்து விடுப்பட்ட அம்பெனில்

பொறுப்பேற்பு யாருடையது???

 

புறங்களை உள்ளிழுத்து அக நாசம்

செய்து கொள்ளும் வினை அவசியம் இல்லை

சில சகவாசம் வினை எனில் இழுத்துப்பிடிப்பதும் தேவையில்லை

 

போகவிட்டுப் புறஞ்சொல்வதும்

கொம்பு சீவி எருமையை வளர்ப்பதும்

பறந்தால் சிறகுடைப்பதும்

நியாயம் எனக் கழுத்தறுப்பதும் இங்கு சாதாரணம்…

 

வாழ வேண்டும் எனில் தினம் மரணித்து

 ஒவ்வொருமுறையும்

பீனிக்ஸ் பறவையாய் உயிர்த் தெழ வேண்டும்…

 

இல்லை எனில்

பிடி சாம்பலில் மண்ணாகி

படச் சட்டகத்தில் பிம்பமாக்கி

மரணித்தப்பின் நல்லவனாக்கி

படம் காட்டிச்செல்லும்  காலம் இது…

 

-        சல்மா தினேசுவரி, மலேசியா

 

 

2 comments:

  1. These are in any other case known as "multi-line" video games they usually work similarly 1xbet to buy-a-pays. You get determine on} what number of} lines you'd like to purchase and what number of} credit you'd prefer to spend on each line. At a penny slot, you could spend 1¢ on the middle line and take a spin. Some machines have as much as} 500 lines that you could bet on, and you may normally bet somewhere between a penny and a dollar per line .

    ReplyDelete