Home Top Ad

Share:

 

இலையுதிர் காலம்…

ஒரு இலை உதிர்த்தலின்

பயணம் உரமாய் முடிகிறது இம்மண்ணில்…

சருகுகளாய் சர சரத்தாலும் சாக்கடையாய் ஆவதில்லை…



வாழும்போது பச்சையமாய்

வாழ்ந்த பின் உரமாய்

உயிர்வளியின் பிறப்பில்

பங்கெடுக்கும் இலைகளுக்குப்

பரவசங்கள் இருந்ததில்லை…

 

பூக்களின் வாசங்களில் மயங்கி

கிள்ளி எறியும் இலைகளின் வாசங்களை

உணர்ந்ததில்லை நாம் …

காற்றின் சல்லடைகளைச் சாகவாசமாய்

கடந்து செல்வது போல்

இவ்வாழ்வை நாம் கடந்து செல்வதில்லை…

 

மழைப் பிடிகளில் இலைகள்

மண்ணைக்காப்பதுபோல …

எதையும் காப்பதற்கான பொறுமை

நம்மில் இல்லை..

வேரருக்கவும் வெள்ளக்காடாய் மாற்றவும்

தெரிந்தோ தெரியாமலோ

நித்தம் காத்திருக்கிறோம்!

 

-        சல்மா தினேசுவரி, மலேசியா

16 comments:

  1. மிக அருமை

    ReplyDelete
  2. அருமை..மேலும் தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகளுக்கு நன்றியும் அன்பும் ... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்

      Delete
  3. பூக்களின் வாசங்களில் மயங்கி

    கிள்ளி எறியும் இலைகளின்🌱🌱🌱 வாசங்களை

    உணர்ந்ததில்லை நாம்.

    அருமையான வரிகள் ஐயை👏👏👏

    ReplyDelete
  4. மிக அருமை சதோதரி, மிகவும் உயிர்ப்பாக உள்ளது

    உவமையும் கருத்தும் மிகச் சரியாகப் பொருந்துகின்றன. இலைகளின் முகத்தை மன காட்சிக்குள் கொண்டு வந்து உயிரைத் தொடுகிறது ! தியாகங்களின் வெளிச்சம் மின்மினி பூச்சுகளின் பளபளப்பில் மறைந்துதான் போகின்றன!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுத உந்துதலை அளிக்கிறது...மிக்க நன்றி

      Delete
  5. மிக அருமை தோழி

    ReplyDelete
  6. மிக அருமை தோழி ( சுந்தரி )

    ReplyDelete
  7. நல்லா வந்திருக்கு.கோ.புண்ணியவான்.

    ReplyDelete
  8. வேரருக்கவும் வெள்ளக்காடாய் மாற்றவும்
    தெரிந்தோ தெரியாமலோ
    நித்தம் காத்திருக்கிறோம்!

    அருமையான வரிகள் தோழி....

    இயற்கையின் சீற்றத்தையும் வரமாய் ஏந்தி நிற்கிறோம்....

    ReplyDelete