Home Top Ad

ஓராயிரம் படிமங்கள்!

Share:

 


 நினைவில் ஓடும் ஓராயிரம் படிமங்களுக்கு

வார்த்தைகள் இல்லை

இல்லாத சொற்களைச் சொல்வது

எவ்வகைச் சாத்தியம்?

ஆயிரம் கேள்விகள்…

ஊமையாகிறோம்…

 

புரிதல் என்பது வார்த்தைகளில் எனில்

கண்கள் எதற்கு?

மீண்டும் ஆயிரம் கேள்விகள்…

இப்போது குருடாகி நிற்கிறோம்…

 

விழிகள் பேசாத வலிகள்

 உணர்வுகள் உணர்த்தும் எனில்

கண்களோ வார்த்தைகளோ எதற்கு?

மீண்டும் மீண்டும் ஆயிரம் கேள்விகள்…

 இப்போது ஜடமாகிறோம்…

 

ஒருமுகம் எல்லாருக்கும் உண்டு

பலமுகம் பலருக்கும் உண்டு …

குணம் மறைக்க வழியில்லை

மனம் மறைக்கும் வித்தை மட்டுமே..

 

வித்தையில்  வெல்பவன் நல்லவன்

தோற்பவன் கெட்டவன் …

மிச்சம் இலவச  முகமூடி …

 

எந்த முகமூடியானாலும்

அணிந்து விட்டு போகிறேன்

கவலையில்லை  …

நினைவில் ஓடும் ஓராயிரம் படிமங்களுக்கு

வார்த்தைகள் இல்லை எனக்கு!

-        சல்மா தினேசுவரி, மலேசியா




5 comments: