வந்தவன் குயவனாகிப் போகப்
போட்டுடைத்தவன் என்னவோ
நான்தான்
ஆறடி தோண்டி மறக்கப்படும்
சாத்தியங்கள் இருக்கும்போது
ஆர்ப்பாட்டங்கள் ஏன்…
நாலாறு மாதங்கள் வேண்டி
பின்னொரு நாள்
பிண்டமாய் மாறி
அண்டமாய் அடங்கிவிடும் தத்துவங்கள்
தெரிந்தும் மனம் நிதம்
சித்திரம் வரைய சுவரா
மாயை விளிம்பு நிலையா
நெஞ்சில் வாழ்த்தி கொண்டாட
வாழ்தல் தத்துவமா..
ஓட்டைகள் ஒழுகலில்
ஒன்பதும் ஒன்றாய்
கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்து
ஞான நந்தவனத்தில்
மீண்டும் எச்சங்களாய்
-
சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)


அருமை
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
Delete