Home Top Ad

நன்னயங்களின் நஞ்சு!

Share:

வாள்போல் பகைவர் நீயெனில்

என்றோ வாள் ஏந்தி வீழ்த்திருப்பேன்

கேள்போல் வேடமிட்ட கேவலம் சொல்லி மாளவில்லை

சத்தியவாள் ஏந்தவும் யாருக்கும் துணிவில்லை

 

நன்னயங்களில் நஞ்சுப்பூசி வேல் கொண்டு மறைக்கும்

அவலங்களுக்குப் பஞ்சமில்லை

இன்னார்களின் இயலாமைகளில் நேர்மையைக்

கொன்று புதைத்து கேவலங்களின் அடையாளமாய்

பறைசாற்றுவதில் நிகர் யாருமில்லை

 


என் சகலத்தையும் சமாதியாக்கிச் சாவகாசமாய் நீ இளைபாறும் நேரத்தில்

சுடுகாட்டின் காளியாய் ஜூவாலைகளை ஏந்தி தயாராக ஒற்றைக்காலில் நிற்கிறேன்

இனி மிதிப்படும்  தலைகளை நிதானமாய் எண்ணிக்கொள்

என் வாய் திறந்து நாக்கு நீளும் வரை

ஜன்ம ஜன்மமாய் உன் சந்ததியின் சாபங்களும் நீண்டுகொண்டே…


- சல்மாதினேசுவரி (Salma Dhineswary)


4 comments:

  1. அம்மாடீ!... படிக்கும்போதே திகிலா இருக்கே! என்னவொரு ரெளத்ரம்!
    எரிமலைக் குழம்பாய் அள்ளி வீசிய சொற்கள்! எனினும் அணியாய் அமைந்தது சிறப்பு!
    ஆனந்த விகடன் 'சொல்வனம்'பகுதிக்கு அனுப்புங்கள் சகோ!
    வாழ்த்துகள்! 👏💐

    ReplyDelete