வாய்த்ததில்லை ஒரு போதும்
காலங்காலமாய் நினைவுகளும்
நீண்டு வளர்ந்த கனவுகளும்
ஆயிரம் கவிதையின் வரிகளும்
வெள்ளையும் கருப்புமாய்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கும்
ஊமைப்படங்களின் பிம்பங்களும்
ஏக்கங்களின் நடுவில்
உறவிழந்த உள்ளமாய்
பாலை பிரிவு துயரத்தின் உச்சமாய்
வேர் முளைத்தும் மரம்
பட்டுப்போன கணக்காய்
வகை வகையாய் வருத்தங்கள்
வந்த போதிலும்
தழும்பாகிப் போன காயங்கள்
மீந்து கிடப்பதால் சிரித்து
வைக்கும்
நொடிகளில்
சுயம் இழக்கிறேன்
உடையும் உன் ஒவ்வொரு
சொற்களையும்
சிரிப்பினில் ஏந்தும்
பக்குவம் எனக்கில்லை
முக மூடியை கழற்றி எறியவும் திராணியில்லை
சிதறும் என் சிரிப்புகளும் புன்னகையும்
தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டே
- சல்மா தினேசுவரி (Salma Dhineswary)


No comments