நூலாய்ப் பறக்கிறது உயிர்
காகிதப்பட்டங்கள்
கிழிந்து கிழிக்கப்பட்டுக்
கசங்கி விடுகிறது
ஏகமாய்ச் சிலைகள் பலருக்கு
அனேகமாய் இல்லாமல் சிலருக்கு...
பிரிவாதங்களில் தத்துவங்கள்
நசுங்கி விடுகிறது
கோப்பை நிரம்பி
நீர் விளிம்பு வரை
உதடுகள் மட்டுமே நனைகிறது
விழுங்கல்களில் காய்ந்தும் விடுகிறது
கசங்கி, நசுங்கி காய்ந்து வாழாத
வாழ்க்கைக்கு
வார்த்தைகளால் சாயம் பூசிக்கொள்கிறோம்
அழகழகாய்
சில நேரங்களில் நல்ல வார்த்தைகளில்
சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளில்
- - சல்மா தினேசுவரி (Salma Dhineswary)


அறுமை 👏🙏
ReplyDeleteSuperb 😍
ReplyDeleteபடித்தேன்,இரசித்தேன்.
ReplyDeleteஅருமை
ReplyDelete