மின்சார மரத்தில்
மாட்டிக் கொண்ட
பட்டம் நான்...
காகிதம் நான்
என அறிந்து
போதி மரப் புத்தர்
போல்
காற்றோடு அமைதி காத்தேன்...
பறவை மிஞ்சும் சூறாவளி
நான் எனக் கதை பரப்பி
விட்டார்கள்
தலைக்கணம் தலையில்
அமர்ந்ததும்
அமர்க்களப்பட்டேன்...
தலைகால் புரியாமல்
முட்டி மோதினேன்
காற்றோடு போராட்டத்தில்
கழிக்கப்பட்டேன்...
காப்பாற்றுவதாகச்
சொல்லி
பலர் பிடித்து இழுத்ததில்
வாலறுந்து போனது
மீதி கிடந்த உடலில்
அழுகிய
பிண வாடை...
உசுப்பி விட்டவன்
இன்னொரு பட்டத்தோடு...
– சல்மா தினேசுவரி (Salma Dhineswary)


Arumai🌹🌹🌹
ReplyDeleteநன்றி தோழி
Deleteவாழ்க்கையில் இதுவும் ஒரு பகுதி....
ReplyDeleteஉண்மைதான் ஆசிரியை...
Deleteஅருமை... பிறர் பேச்சு கேளாமை சிறப்பு?
ReplyDeleteநன்றி தோழி
Deleteகடந்து வந்த பாதையில் உதித்த வரிகள் என்று உணர வைக்கின்றது சகோதரி
ReplyDeleteஉண்மைதான்
Deleteகடந்து வந்த பாதையில் உதித்த வரிகள் என்று உணர வைக்கின்றது சகோதரி
ReplyDeleteMiga Arumai...
ReplyDeleteநன்றி தோழி
Delete