1.
கலாச்சாரத்திற்குப்
பிறப்பிக்கப் பட்டதால்
இன்னும்
வாழ்ந்து
கொண்டுதான்
இருக்கிறோம்
ஒரு
கூரைக் கீழ்
நானும்
நீயும்
நான்
சொல்லி நீ கேட்க
இது
என்ன ஜெனநாயகமா?
குடும்பம்
அதனால்
நீ
சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்
நான்
எதையும் கேட்பதில்லை...
மூக்கணாங்
கயிறுக்கும்
மூன்று
முடிச்சிக்கும்
ஒற்றுமை
உனக்கு
தெரிகிறது
வித்தியாசம்தான்
எனக்குத்
தெரிவதில்லை...
2.
உன் அழுக்குகளை
நீ
மறைத்துக்
கொண்டாய்
நான்
அழகாய்
இருப்பதாகக்
கூறி...
மறைக்கப்
பட்ட
உன்
உண்மைகளை
நானும்
மறக்கப்
பழகிக்
கொண்டேன்...
சிரிப்புகளோடு
உன்
கனவில்
நானும்
பறந்தேன்...
சப்தமில்லாமல்
என்
சிறகுகளை நீ உடைத்தும்...
கற்பனைகளைக்
கொடுத்து
என்
உணர்வுகளை
கொன்று
போனாய்...
உடைந்த
என்
சிரிப்புகளையும்
கிழிந்த
என் வாழ்வையும்
இன்னும்
ஒட்டிக்
கொண்டுதான்
இருக்கிறேன்
பிசு
பிசுக்கும்
என்
கண்ணீரில்..
-


Pennaley peen alukiral...
ReplyDeleteஉண்மை...
Deleteஉண்மை...
DeletePennaley peen alukiral...
ReplyDeletePennaley peen alukiral...
ReplyDeleteUnmai
ReplyDeleteபிசு பிசுக்கும்
ReplyDeleteகண்ணீரைத்
துடைக்க நீளும்
கைகளும்
ஒரு நாள்....
👌 👌 👌
Nice Snr...👌👌👌
ReplyDeleteNice Snr...👌👌👌
ReplyDelete