இன்னும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு கனவும்
கனவு கொடுத்த ஆசைகளும்...
கலாச்சார வேலியில்
பாதி நசுக்கப்பட்டாலும்
பின் நவீனத்துவ வாழ்க்கையில்
மீதி புதைக்கப்பட்டாலும்
இதயத் துடிப்பின் முதுகுத் தண்டில்
எங்கோ ஒரு மூலையில்
புகைந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரு கனவும் கனவு கொடுத்த
ஆசைகளும்...
வித்திட்டவன் ஆக்கிரமிப்பில்...
நிர்வாணமாக்கப்பட்ட
மனங்களின் இயலாமையில்...
இளமை தின்று
முடித்த முதுமைகளில்...
நக்கரித்துக்
கொண்டிருக்கும்
நகர அதிர்வுகளில்...
கொஞ்ச கொஞ்சமாய்
களவாடப்பட்டாலும்...
பறவை இட்ட எச்சம் போல்
இன்னும் எங்கோ ஒட்டியிருக்கிறது
ஒரு கனவும் கனவு கொடுத்த
ஆசைகளும்…
– சல்மா தினேசுவரி
(Salma Dhineswary)

Unmai dear😍👍
ReplyDeleteஅதே...நன்றி கண்மணி
Delete👌
ReplyDeleteஅருமை சல்மா. நினைப்புத்தான் கனவாக உருமாற்றம் பெறுகின்றது.
ReplyDeleteநக்கரித்து என்ன பொருள்?
Super dear
ReplyDeleteநன்று...
ReplyDeleteநல்லா இருக்கு. நக்கரித்து கொண்டிருக்கும் - என்பதின் அர்த்தம் புரியல.
ReplyDelete