Home Top Ad

அறுபடும் மரணங்கள்

Share:

செருப்புகளைப் போல

சில நிலைகளைத்

துறந்து மறந்து வாழ

எஞ்சி நிற்கிறது நமக்கான வாழ்வு...

 

அறுபடும்

எனத் தெரிந்தும்

நாம் மறுப்பதில்லை

செருப்புகளை…

 

அறுபடும் சாத்தியங்களில்

பழைய செருப்பின் சௌகரியங்களும்

புதிய செருப்பின் அசௌகரியங்களும்

இருகிவிடுகிறது உள்ளுக்குள்

 

இருப்பினும்

மற்றொரு செருப்போடு

பயணப்படுகிறோம்

வாழ்வின் எதார்த்தத்தோடு…

 

-சல்மா தினேசுவரி (Salma Dhineswary)

 


12 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி கண்மணி, உங்களின் கருத்திடல் மேலும் எழுத தூண்டுகிறது.

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி சீலன், உங்களின் கருத்திடல் மகிழ்ச்சியை அளிக்கிறது

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  4. நமக்கான வாழ்வு! அதன் நிலைபாடுகளும். அருமை!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete