Home Top Ad

மூழ்காத காகிதக் கப்பல்

Share:










பொம்மைகளோடு

பழக்கப்படாத என் பால்யம்

வெறும் காகிதக் கப்பலோடு

மட்டுமே பயணம்…

 

மழைக்காலத் தேக்கங்களில்

மிதக்க விடப்பட்ட

என் காகிதக் கப்பல்கள்

பல மூழ்கிப் போயின...

 

மழையில்லா நாட்களில்

நீங்கள் கண்டெடுக்க முடியும்

மூழ்கிப் போன காகிதக் கப்பல்களை

என் பழைய வீட்டு

நீர்த்தொட்டிகளில்…

தோம்புகளில்...

 

இருப்பினும்

இன்னும் மூழ்காமல்

அழகாய் மிதந்துக் கொண்டிருக்கிறது

என் பால்யம்...

-சல்மா தினேசுவரி Salma Dhineswary

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Replies
    1. வசன கவிதை நன்று!
      தாங்கள் செலுத்திய காகிதக் கப்பல்கள்தான் மூழ்கியது. அந்த பால்ய நதியில் ஓடவிட்ட நினைவுக் கப்பல்கள் இன்னும் மிதந்து கொண்டிருப்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது கவிதை. வாழ்த்துகள்! 👏

      Delete
  3. செம்ம செம்ம... இப்ப நாம எவ்வளோ மேல போனாலும் பழைய ஏக்கங்கள் முழுமை அடைவதே இலை...

    ReplyDelete