Home Top Ad

தேநீர் மிச்சங்களில் சில எச்சங்கள்

Share:


சில இறுக்கங்களில்

தளர்க்க நினைத்தும்

அகப்படாத

என் மனப் போராட்டங்களை

அடக்க முயற்சித்தேன்

தேநீர் விழுங்கலில்...


ஜன நாயகம்

என்ற பல நாடகங்களில்

இதுவும் ஒரு போர்வைப் போலும்

போர்த்திக் கொள்ளாமலே வியர்த்தது...

 

ஆரம்பமே

தொழில் தொடங்கி கல்வியில் நிற்க

உன் முதுகலையும் என் இளங்கலையும் 

முரண்பாடுகளில்

 

பிடித்தது பிடிக்காதது

அரசியல்

மார்க்கீசம்

கடவுள் என

உன் கொள்கைப் பரப்புகளை

மலையாய்

பேசி முடித்து

துளியாய் என்னையும்

கேட்டு  வைத்தாய்...

 

சகஜமாய்

பேச முற்பட்டு

முடியாத பட்சத்தில்

சிறு புன்னகைக்குள்

ஒழிந்து கொண்டேன்...

 

தேநீர் மிச்சங்களில்

நம் விடைப் பெறுதலும்

சில வாரங்களில்

‘ பெண் பிடிக்கவில்லை ’

என்ற உன் தகவலும்.....

 

மீண்டுமொரு

ஜனநாயகம்

மற்றொரு கோப்பைத் தேநீரோடு...









2009 UKM கவிதைப் போட்டி

- சல்மா தினேசுவரி (Salma Dhineswary)

20 comments:

  1. மிகச்சிறப்பு அக்கா

    ReplyDelete
  2. நன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete
  3. Replies
    1. மிக்க நன்றி தோழி, தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
    2. அருமையான படைப்பு

      Delete
    3. நன்றியும் மகிழ்ச்சியும்...தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  4. வாழ்வின் எதார்த்தத்தை மிகவும் எதார்த்தமாக.....
    சிறப்பு,சல்மா.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  5. தங்கள் கவிதையின் தலைப்பு என் மனதை கவர்ந்திழுத்தது. வார்த்தை ஜாலங்கள் மிகவும் அருமை,சகோதரி.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது

      Delete
  7. அருமை தோழி😍😍😍

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி கண்மணி, மகிழ்சியும் கூட. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  8. அருமையான தலைப்பு. இந்நவீன காலத்தில் பூச்சாண்டி காட்டி குழந்தைகளை பயமுறுத்துவதைவிட நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குவோம். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  9. நிதர்சனம் ஆசிரியை, என் நன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்

    ReplyDelete
  10. கவிதையை மிகச் சிறப்பு ஆசிரியை.

    ReplyDelete
  11. மிக்க நன்றி ஆசிரியை, தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete
  12. நனிசிறப்பு... சொல் முத்துக்களை அழகிய கவிதை மாலையாய் கோர்த்து விட்டீர்கள்

    ReplyDelete