பிள்ளைகளை வளர்ப்பதாகச் சொல்லிப்
பூச்சாண்டிகளைச் சப்தமில்லாமல்
நாம் வளர்த்து விடுகிறோம்...
குழந்தைகளைத் திணறடிக்க
நம் பூச்சாண்டிகள்
பலவித பரிணாமங்களில்
தலை இல்லாமலும்
கை கால் இல்லாமலும்
கரிச்சட்டியை விட கருப்போடும் ...
சாத்தியப்பட்டால்
பிள்ளைகளைத் திணித்துக்
கொண்டு போகும் சாக்கோடும்
அடையாளங்காணப்படுகின்றன
வளர வளர
பிள்ளைகளுக்குப் பூச்சாண்டிகள்
பழக்கமாகிப்போக
விரக்தியில்
நாமே
பூ ச்சாண்டிகளாகிறோம்...!
- சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)

அருமை
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும், தொடர்ந்து வாசிக்கவும்!
DeleteSuperb dear
ReplyDeleteஉங்கள் கருத்து மகிழ்ச்சியை அளிக்கிறது, தொடர்ந்து வாசிக்கவும்!
Deleteஅருமை சல்மா; ஆசானின்் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteதிருத்தம்:திணறடிக்க ; பரிணாமங்களில்
வணக்கம்,நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திருத்தி விடுகிறேன் ஐயா.
Deleteஅருமையான தலைப்பு. இந்நவீன காலத்தில் பூச்சாண்டி காட்டி குழந்தைகளை பயமுறுத்துவதைவிட நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குவோம். அருமையான பகிர்வு.
ReplyDelete