Home Top Ad

கடக்காத காலங்கள்

Share:

புத்தக இடுக்கில் மயில் இறகுகள்...
வண்ணங்கள் நிறைந்த பால்யத்தில்
வளர்வதாகச் சொல்லி
கதை வளர்த்துக்கொண்டோம் 
கதை கதையாய்...

ஒரு குவளை தண்ணீர் ஊற்றி
ஒரே பூப் பூத்த இரகசியத்தை 
வாசங்களாய் நிரப்பிக் கொண்டோம்
மொட்டுக்களில்...

மனிதனின் புறக்கணிப்பு
தெரியும் வயது போலும்
ஓணாவிடம் மட்டுமே சலிக்காமல்
மணி கேட்டுக்கொண்டோம்...

பல முகங்களில் நிலைத்திருந்தாலும்
எல்லாருடைய அப்பாவையும்
முருகப்பூவாகவே அடையாளங்கண்டு
கொண்டோம்...

திரி திரி பந்தங்களில் வெளிச்சங்களை
திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
‘கொட்டு’க்களையும்
சேர்ப்பித்துக் கொண்டோம்...

கடந்து போயும் இன்னும் 
கடந்துக் கொண்டிருக்கிறது பால்யம்
புத்தக இடுக்கில்...
பூக்களில்...
மணி கேட்போரில்...
அப்பாவின் பெயரில்..
திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு கணத்தில்...                        
                  
 -சல்மா தினேசுவரி ( Salma Dhineswary)

14 comments:

  1. நன்று, தொடர்ந்து வாசிக்கவும்!

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி தோழி ...தொடர்ந்து வாசியுங்கள்...

      Delete
  3. Replies
    1. நன்றி தோழி, தொடர்ந்து வாசியுங்கள்...

      Delete
  4. என்றும் நிலைத்திருக்கும் நீங்கா நினைவுகளாய்...

    ReplyDelete