எழுத்துகளின் கோர்வையில்
நொடிப்பொழுதில் தூக்குக்கயிராகவும்
அடுத்த கணமே தாலாட்டும் தூளியாகவும்
தயக்கமே இல்லாமல் நடைப்பழகும் வார்த்தைகள் பல...
எய்தவனின் நல்ல வார்த்தைகள்
நம் பேரேட்டில் நிலைப்பதில்லை...
கெட்ட வார்த்தைகளை மட்டுமே
கடிவாளமிட்டுக் கொள்கிறோம்...
மரணிக்க வேண்டிய வார்த்தைகளை
நித்தம் நித்தம் வளர்த்தெடுக்கிறோம்
மரணித்த வார்த்தைகளையும்
சாக்காடு வரை சென்று மீட்டெடுக்கிறோம்...
விடுபட்ட வார்த்தைகளில்
பகைமை வளர்த்து,
விடுபடாத நம் வார்த்தைகளின் மௌனத்தில்
ஒளிந்து கொள்கிறோம்...
உறவு பிடித்து வாழ்வதில்
பழக்கப்பட்டவர்கள் இல்லை நாம்...
வேண்டாத சொற்களைப் பிடித்தே
காலம் தள்ளுகிறோம்.

👌
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
Delete❤️ super
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
Deleteஅருமை
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
Deleteநன்று, அருமையான சொல்லாடல்.
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
Deleteமனிதனின் மனம் ஒருவர் செய்த கெட்டதை மட்டுமே அசை போடும். நல்லதை மறந்து விடும். என்ன செய்வது...
ReplyDeleteஉண்மை, கடந்து வர முயற்சிப்போம்.நன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்...
Deleteநனிநன்று
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
Deleteஅருமை. மனம் குப்பைத் தொட்டியல்ல ...... மறதி மனிதனுக்குக் கிடைத்த சிறந்த வரம்.....
ReplyDeleteமுற்றிலும் உண்மை.நன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்.
Deleteஅருமை தோழி
ReplyDeleteமிக்க நன்றி தோழி,தொடர்ந்து வாசிக்கவும்.
DeleteSupeb dead
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
DeleteSuperb dear..sorry typing error
ReplyDeleteபரவாயில்லை,நன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து வாசிக்கவும்
DeleteSuper dear🌹😍😍
ReplyDeleteநன்றி கண்மணி,தொடர்ந்து வாசிக்கவும்
DeleteSuperb Salma
ReplyDeleteமிக்க நன்றி தொடர்ந்து வாசிக்கவும்
Delete