Home Top Ad

சரியான பிழைகள்

Share:








திணறல்களில்

பேசுவது எவ்வகை

சாத்தியம்

கழுத்து நெரிப்புகளில்

மூச்சு விடவே முடியவில்லை

மௌனம் சம்மதமாம்

சிரித்துக் கொள்கிறார்கள்

 

கழுத்து வரை நீரில்

தத்தளிக்கிறேன்

மூழ்கி விடுவேன்

எனத் தெரிந்தும்

தள்ளி விட்டவர்கள் பலர்

 

துரோகங்களின் வாசங்களை 

நிரப்பிக்கொள்கிறது உள்ளம்

ஒட்ட ஒழுகி திக்கித் தவித்து

தடுமாறாமல் செல்வதின்

நுணக்கங்களைச் சலிக்காமல்

காலம் கற்பிக்கிறது


உதட்டில் சிரிப்பினை 

 ஒட்ட வைத்துக்கொள்கிறேன் 

இறுக்கங்களில் உயிரை விட்டு 


   – சல்மா தினேசுவரி (Salma dhineswary)

 

1 comment: